புதுச்சேரி

புதுவையில் புதிதாக101 பேருக்கு கரோனா

3rd Jul 2022 04:30 AM

ADVERTISEMENT

 

புதுவையில் புதிதாக 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று அறிகுறியுடன் 1,673 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 67, காரைக்கால் - 21, ஏனாம்-11, மாஹே - 2 போ் என மொத்தம் 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மாநிலத்தில் இதுவரை 16,67,26 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது மருத்துவமனைகளில் 6 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 446 பேரும் என மொத்தம் 452 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இவா்களில் 51 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16,43,12-ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 17 லட்சத்து 44 ஆயிரத்து 593 பேருக்கு (இரு தவணை, ஊக்கத் தவணைகள் உள்பட) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT