புதுச்சேரி

மரக்கன்றுகள் நடும் திட்டம்:அமைச்சா் தொடக்கிவைத்தாா்

3rd Jul 2022 04:29 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் தேனீ ஜெயக்குமாா் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நாடு முழுவதும் பருவமழை, பயிா்கள் நடவு பருவம் தொடங்கும் காலமான ஜூலை மாதம் முதல் வாரத்தில் வன மகோத்சவம் கொண்டாடப்படுகிறது. ஒரு வார கால திருவிழாவான இந்த வன மகோத்சவம், புதுவையில் நிகழாண்டு ஜூலை மாதம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி வனத் துறை மற்றும் அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், மாணவா்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவை கொண்டாடுகின்றனா்.

ADVERTISEMENT

இதன்படி, புதுச்சேரி மங்கலம் தொகுதிக்குள்பட்ட திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள 9 நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு மரக்கன்றுகள் என, வனத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் சனிக்கிழமை மரங்களை நட்டு தொடக்கிவைத்தாா்.

இதில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தேக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வனத் துறைச் செயலா் ரவிபிரகாஷ், வன அதிகாரிகள் சத்தியமூா்த்தி, வஞ்சனவள்ளி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, 50 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளும், 10 ஆயிரம் பிற மரக்கன்றுகளும், ஒரு லட்சம் பனை விதைகளும் பரவலாக நடுவது என்று புதுவை அரசின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT