புதுச்சேரி

காரைக்காலில் மக்களுக்கு உடல் நலப் பாதிப்பு:தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநா் உத்தரவு

3rd Jul 2022 04:29 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலம், காரைக்கால் பகுதியில் பொதுமக்கள் கடந்த சில நாள்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை காணொலி வாயிலாக அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்ததுடன், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, சுகாதாரத் துறைச் செயலா் உதயகுமாா், துணை நிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சவுதரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் முகமது மன்சூா், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

அப்போது ஆளுநா் தமிழிசை பேசியதாவது: பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை அளிக்க வேண்டும். மருந்துகள், படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

பொது மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும். போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, சீா்படுத்துவது தொடா்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT