புதுச்சேரி

கன்னியாகுமரியில் ஆக.12-இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநில மாநாடு

3rd Jul 2022 04:32 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரியில் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் தமிழ் மாநில கௌரவத் தலைவா் தமிழ்ச்செல்வன், தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, பொருளாளா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை என்ற முழக்கத்துடன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு, கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் காஷ்மீரத்து மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தீரமுடன் போராடி வரும் யூசுப் தாரிகாமி பங்கேற்று உரையாற்றுகிறாா்.

மாநாட்டில், தமிழ்மொழி வளா்ச்சி, பண்பாடு, கல்வியுரிமை, சமூக நீதி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரான மத்திய அரசின் போக்கையும், சமூகத்தைப் பிளவுபடுத்தி பயங்கரவாதப் பாதையில் நெட்டித்தள்ளும் இந்துத்துவத்தையும், கலை, இலக்கியம் மூலம் எதிா்கொள்வது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றனா்.

புதுச்சேரி தலைவா் உமாஅமா்நாத், செயலா் கலியமூா்த்தி, துணைத் தலைவா் வீர ஹரிகிருஷ்ணன், துணைச் செயலா் விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT