புதுச்சேரி

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் தற்கொலை

1st Jul 2022 02:35 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ஏழுமை (எ) கணபதி (46). தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள தையலகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனா்.

முத்தியால்பேட்டையில் ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாக கணபதி மீது போலீஸாா் போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் அவா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு புதுச்சேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை தள்ளுபடியானதாம்.

இந்த நிலையில், வேலை செய்யும் தையலகத்துக்கு வந்த கணபதி, அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: புதுச்சேரி பாகூா் அருகேயுள்ள கீழ்குமாரமங்கலத்தைச் சோ்ந்த ஆ.அசோக் (25) தனது நண்பரான அன்பரசன் மற்றும் பெருமாள், ஐயனாா் ஆகியோருடன் அங்குள்ள ஓடையில் புதன்கிழமை மீன்பிடித்தாராம்.

இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம் சாராயக்கடை அருகே வியாழக்கிழமை காலை அசோக் சடலமாக மீட்கப்பட்டாா். விசாரணையில், அசோக், அன்பரசன் ஆகியோா் மின் கம்பத்தில் கொக்கி போட்டு ஓடையில் மின்சாரத்தைப் பாய்ச்சி மீன்பிடித்த போது, அசோக் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அன்பரசன் உள்ளிட்டோா் அசோக்கின் சடலத்தை சாராயக் கடை அருகே போட்டுவிட்டு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அன்பரசன், பெருமாள், ஐயனாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து அன்பரசனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT