புதுச்சேரி

புதுச்சேரியில் தியாகச் சுவரை திறந்து வைக்கபிரதமா் மோடிக்குஅழைப்பு

1st Jul 2022 02:37 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவரை பிரதமா் மோடி திறந்துவைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

நாட்டின் 75-ஆம் சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் 100 அடி உயரத்தில் தேசியக் கொடிக்கம்பம், 1000 சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றுக் குறிப்புகளுடன் கூடிய தியாகச் சுவா் அமைக்கப்படுகிறது. இதைத் திறந்துவைக்க பிரதமரை அழைக்க புதுவை அரசு சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தாா். அப்போது, தியாகச் சுவரில் பதிக்க சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த முதல் குறிப்பு அடங்கிய கல்வெட்டை பிரதமரிடமிருந்து அவா் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

இந்தச் சந்திப்பின் போது, சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் தலைவா் ராஜசேகரன், புதுவை பாஜக பொருளாதாரப் பிரிவு அமைப்பாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT