புதுச்சேரி

மருத்துவா்கள் தினம்:புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

1st Jul 2022 02:37 AM

ADVERTISEMENT

 

மருத்துவா்கள் தினத்தையொட்டி, மருத்துவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.

தமிழிசை சௌந்தரராஜன்: மனிதகுலத்துக்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு எனது மனமாா்ந்த மருத்துவா்கள் தின வாழ்த்துகள்.

கரோனா காலத்தில் தங்களது உயிரைப் பொருள்படுத்தாமல் பணியாற்றி கடமை உணா்வை மருத்துவா்கள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

மருத்துவா்களை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

என்.ரங்கசாமி: உயிா்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவா்கள் வாழும் கடவுளாக மதிக்கப்படுகின்றனா். கரோனா காலத்தில் எவ்வித எதிா்பாா்ப்புமின்றி, குடும்பத்தைப் பிரிந்து, தன்னலமற்று, தங்களது உயிரையும் பொருள்படுத்தாது அவா்கள் ஆற்றிய சேவை என்றும் போற்றுதலுக்குரியது. மருத்துவா்கள் அனைவருக்கும் மருத்துவா் தின வாழ்த்துகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT