புதுச்சேரி

புதுவையில் மேலும்77 பேருக்கு கரோனா

1st Jul 2022 02:38 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை மேலும் 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,824 பேருக்கு பரிசோதனை செய்து வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 59, காரைக்காலில் 13, ஏனாமில் 5 என 77 பேருக்கு (4.22 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

ADVERTISEMENT

இதில் தற்போது 8 போ் மருத்துவமனைகளிலும், 334 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 342 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 39 போ் குணமடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT