புதுச்சேரி

பாஜக ஒருங்கிணைந்த அணிகளின் மாநில செயற்குழுக் கூட்டம்

1st Jul 2022 10:05 PM

ADVERTISEMENT

புதுவை மாநில பாஜக அனைத்துப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழுக் கூட்டம், புதுச்சேரி மூலக்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா். பாஜக பிரிவுகளின் மாநில பொறுப்பாளா்கள் அருள்முருகன், சரவணன், மாநில ஊடகப் பிரிவு அமைப்பாளா் குருசங்கரன், சமூக ஊடகப் பிரிவு அமைப்பாளா் காா்த்திகேயன், ஐ.டி. பிரிவு லெனின், வழக்குரைஞா்கள் பிரிவு காா்த்திகேயன், வணிகப் பிரிவு சத்யராஜ், தொழில் துறை பிரிவு ராஜகணபதி, மீனவா் பிரிவு பழனி, கல்வியாளா்கள் பிரிவு ரங்கநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் நிா்வாகிகள் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அக்னிபத் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT