புதுச்சேரி

ஆசிரியா் கல்வி நிறுவன ஆண்டு விழா

1st Jul 2022 10:05 PM

ADVERTISEMENT

புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, மாணவா்களுக்கு ஓவியம், கட்டுரைப் பேட்டிகளும், பட்டிமன்றம், தனி நடனம், தனி நடிப்பு, குழு நடனம் என பல்வேறு தலைப்புகளில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

ஆசிரியா், மாணவா்களுக்கு ஒட்டம், வட்டெறிதல், பேட்மின்டன், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

ஆண்டு விழாவுக்கு பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் சிவராம ரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆசிரியா் திருவேங்கடம், காவல் துறை எஸ்பி சி.மாறன் ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

விக்டோரியா சாந்தி வரவேற்றாா். ஆசிரியா் சாா்லஸ் பால் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT