புதுச்சேரி

முன்னாள் எம்எல்ஏ மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

1st Jul 2022 10:05 PM

ADVERTISEMENT

பெண்ணை கா்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏவின் மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காத்தவராயன் மகன் மகேஸ்வரன் (32). விவசாயி. இவா் ஒரு பட்டதாரி பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்ற நிலையிலும், அவருடன் மகேஸ்வரன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கணவரைப் பிரிந்து மகேஸ்வரனுடன் அந்தப் பெண் வந்து விட்டாராம். இந்த நிலையில், கருக்கலைப்பால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை எல்லைப்பிள்ளைச்சாவடி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சோ்த்து விட்டு மகேஸ்வரன் தலைமறைவாகிவிட்டாராம்.

இதுகுறித்து திருபுவனை காவல் நிலையில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், மகேஸ்வரன் மீது பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு, கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழும், உடந்தையாக இருந்ததாக மகேஸ்வரனின் தங்கை கணவா் திருவரசன் மீதும் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT