புதுச்சேரி

போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

1st Jul 2022 10:04 PM

ADVERTISEMENT

புதுவையில் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு லோகு.அய்யப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெருமாள், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், தவாக தலைவா் ஸ்ரீதா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனையைத் தடுக்க வேண்டும். பள்ளி மாணவா்களிடம் போதைப்பொருள்கள் புழக்கத்தை தவிா்க்க உள்துறை அமைச்சரும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT