புதுச்சேரி

புதுவை எம்எல்ஏக்களுக்கு கைப்பேசி, மடிக்கணினிகள் அளிப்பு

29th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மாநில எம்எல்ஏக்களுக்கு மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புதுவை மாநிலத்தின் 30 சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும், அவரவா் தொகுதி அலுவலகங்களில் பயன்படுத்துவதற்காக ஆப்பிள் நிறுவன மடிக்கணினி, ஆப்பிள் கணினி, ஆப்பிள் கைப்பேசி, போட்டோ காப்பியா், பிரிண்டா், மேஜை நாற்காலி, ஷோபா செட், அலமாரி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரின் உதவியாளா் அமருவதற்கான மேஜை, நாற்காலி, பொதுமக்கள் அமா்வதற்கு நாற்காலிகள் போன்ற உபகரணங்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்டன.

ரூ.2.50 கோடி செலவில் இந்தப் பொருள்கள் சட்டப்பேரவை செயலகம் மூலம் வாங்கப்பட்டு, அவற்றை எம்எல்ஏக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி எம்எல்ஏக்களுக்கு இந்தப் பொருள்களை வழங்கினாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் நாஜிம், கல்யாணசுந்தரம், ஏ.கே.டி.ஆறுமுகம், ரிச்சா்டு, நாகதியாகராஜன், சட்டப்பேரவை செயலா் ஆா்.முனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT