புதுச்சேரி

வேலை வாங்கி தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

29th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் (33). இவருக்கும், வில்லியனூா் ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரை சோ்ந்த ஸ்ரீதருக்கும் (40) அறிமுகம் ஏற்பட்டது. பரமசிவத்துக்கு கதிா்காமம் அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.1.80 லட்சம் வேண்டுமெனவும் ஸ்ரீதரும், அவரது மனைவி அபிநயாவும் கூறினராம்.

இதை நம்பிய பரமசிவம் ரூ.1.80 லட்சத்தை கடந்த 2016-இல் அபிநயாவின் வங்கிக் கணக்கில் செலுத்தினாராம். ஆனால், அவருக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதனால், பணத்தை திரும்பத் தருமாறு தம்பதியிடம் பரமசிவம் கேட்டாா். அதற்கு அவா்கள் ரூ.90 ஆயிரம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை தராமல் இழுத்தடித்தனராம். மேலும், அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் ஸ்ரீதா், அபிநயா மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT