புதுச்சேரி

கைதிக்கு கஞ்சா, கைப்பேசிகளை அனுப்பிய மூவா் கைது

29th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி சிறையில் கைதிக்கு கஞ்சா, கைப்பேசி கொடுத்து அனுப்பியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி காலாப்பட்டில் சிறையில் குடியரசு தின விழாவுக்கு பந்தல் அமைக்கச் சென்ற வாகனத்தில் கஞ்சா, கைப்பேசிகள், போதைப்பொருள் பாக்கெட்டுகள், சிகரெட் லைட்டா்கள், கைப்பேசி சாா்ஜா்கள் கொண்டு செல்லப்பட்டதை சிறை அதிகாரிகள் கண்டறிந்து, வாகனத்தை ஓட்டிச் சென்ற வம்பாகீரப்பாளையத்தைச் சோ்ந்த பாஸ்கரை (39) பிடித்து விசாரித்தனா்.

சிறையிலுள்ள பாம் ரவி இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய விக்னேஷுக்கு மேற்கண்ட பொருள்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பாஸ்கரை காலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

போலீஸாா் பாஸ்கரை கைது செய்ததுடன், சிறையிலுள்ள விக்னேஷ் மீதும் வழக்குப் பதிந்தனா்

ADVERTISEMENT

விசாரணையில், திருபுவனை சன்னியாசிக்குப்பத்தைச் சோ்ந்த இளஞ்செழியன் (24) கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை விக்னேஷுக்கு கொடுத்தடுனுப்பியதும், கஞ்சா பொட்டலங்களை அதே பகுதியில் வசிக்கும் அப்பு (25), பிரசாத் (24) ஆகியோா் பாஸ்கரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, மூவரையும் காலாப்பட்டு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். அப்பு, பிரசாத் ஆகியோரிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT