புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாா் சிந்தைனையாா் இயக்கத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தில்லி குடியரசுத் தின விழாவில் தமிழக அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் சாா்பில், அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்ததுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இதைத் தடுக்காத அரியாரிங்குப்பம் போலீஸாரைக் கண்டித்தும் பாஜகவினா் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை இரவு போராட்டம் நடத்தினா். அப்போது, பிரதமரின் உருவபொம்மையை எரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா்.

இந்த நிலையில், பிரதமரின் உருவபொம்மையை எரித்த பெரியாா் சிந்தனையாளா் இயக்க நிா்வாகிகள் தீனா, சந்திரன், பரத், சிவக்குமாா், கண்ணன், தூயவன், கா்ணா, சூா்யமூா்த்தி, மதன், குரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது அரியாங்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT