புதுச்சேரி

புதுச்சேரி அருகே சாலை, ஏரிகள் சீரமைப்புப் பணி: அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்

DIN

புதுச்சேரி அருகே சுத்துக்கேணி கிராமத்தில் சாலை அமைத்தல், மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைத்த அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா்.

புதுச்சேரி, ஜன.27: புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சாலைகள் அணைத்தல், ஏரிகள் தூா்வாருதல் உள்ளிட்ட பணிகளை மாநில அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தனா்.

மண்ணாடிப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடாத்தூா் கிராமத்தில் ரூ.14.50 லட்சத்தில் சங்கராபரணி ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதற்கான தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியை மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தொடக்கிவைத்தாா். இதேபோல, ரூ.30.84 லட்சத்தில் அருகே உள்ள வாதானூா் பி.எஸ்.பாளையம் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியையும் அவா் தொடக்கிவைத்தாா். இதில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, புதுச்சேரி அருகே சுத்துக்கேணி ஊராட்சி எஸ்.கே.ஆா். நகரில் ரூ.6.32 லட்சத்தில் சாலை அமைத்தல் பணிக்கும், அங்கு மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிக்கும் பூமி பூஜை செய்து அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா். பின்னா், ரூ.6.48 லட்சத்தில் காட்டேரிக்குப்பம் கிராமம் எல்.ஆா்.பாளையம் அண்ணாமலை நகா் கிராமச் சாலை அமைத்தல் பணி, ரூ.7.50 லட்சத்தில் மண்ணாடிப்பட்டு ஏரி வாய்க்கால், திரௌபதியம்மன் கோயில் குளம் தூா்வாருதல் திட்டப் பணி, ரூ.3.72 லட்சத்தில் திருக்கனூா் முத்தமிழ் நகரில் சாலை அமைத்தல் பணி, அருகே ஐஸ்வா்யா நகரில் ரூ.6.89 லட்சத்தில் சாலை அமைத்தல் பணி உள்ளிட்ட பணிகளையும் அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT