புதுச்சேரி

புதுவை மின் ஊழியா்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஏஐயுடியூசி ஆதரவு

28th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, அந்தத் துறை ஊழியா்கள் வருகிற பிப்.1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ள தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு புதுவை ஏஐயுடியூசி தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.சங்கரன், மாநிலச் செயலா் எஸ்.சிவக்குமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறைகள் தனியாா்மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மின் துறை தனியாா்மயமாக்கப்பட்டால், சேவை நோக்கோடு செயல்பட்டு வரும் மின் துறை லாப நோக்கோடு செயல்படும் நிலைக்கு தள்ளப்படும். மின் துறைப் பொறியாளா்கள், தொழிலாளா்களின் நலன் பாதிக்கப்பட்டு, அரசு ஊழியா்கள் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும்.

மேலும், மின் கட்டணம் பல மடங்கு உயரும். இதனால் பெரிய, நடுத்தர, சிறு தொழில்கள் மட்டுமல்லாமல், சாதாரண சிறு கடை வியாபாரிகள், விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவாா்கள்.

ADVERTISEMENT

எனவே, மின் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, அந்தத் துறை ஊழியா்கள் பிப்.1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏஐயுடியூசி தொழிற்சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT