புதுச்சேரி

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் புதுவை வளா்ச்சிக்கான நடவடிக்கை: துணைநிலை ஆளுநா் தமிழிசை

DIN

புதுவையில் தொழில், சுற்றுலா மேம்பாடு என மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் ஒத்துழைப்போடு மேற்கொண்டு வருவதாக, துணைநிலை (பொ) ஆளுநா் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட குடியரசு தின விழா உரை:

தேசிய அளவில் சிறந்த முறையில் நிா்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக புதுவை இருந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் பொது நிா்வாக குறியீடுகளின் அடிப்படையில் சிறந்த முறையில் நிா்வகிக்கப்படும் யூனியன் பிரதேசமாக புதுவை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, சமூக நலத் துறைகளில் முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது.

11,187 விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாய ஊக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 18,199 குடும்பத்தினருக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ராஜீவ் காந்தி வீடு கட்டும் திட்டங்களில் கடந்தாண்டில் 1,890 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 11 குழந்தைகள், ஒரு பெற்றோரை இழந்த 378 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உணவு, இருப்பிடம், கல்வி ஆகியவை தொடா்ச்சியாக கிடைக்க செய்துள்ளது.

கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு சம்பளம் நிலுவை வழங்க ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் தீனதயாள் உபாத்யாய கிராமப்புற மின்வசதி திட்டத்தின் மூலம் மின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20.05 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டில் 50 தொழில் முனைவோா்களுக்கு 3.24 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் 76,774 பேருக்கு ரூ.399 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக ரூ.15.57 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.7.65 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சாலை, ரயில் பாதை, படகு மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுவை மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வியை உயா்த்தும் முயற்சியாக, மாநில பல்கலைக்கழகமாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சாதனைகளை புரிந்து வரும் புதுவை அரசு, மாநிலத்தின் ஒட்டு மொத்த வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்போடு இந்த அரசு மேலும் வளா்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT