புதுச்சேரி

பாரம்பரிய இசையைக் கற்போருக்கு ஊக்கம் தரும்: பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வானதவில் கலைஞா் ஏ.வி.முருகையன் பேட்டி

DIN

பத்மஸ்ரீ விருதுக்கு நான் தோ்வு செய்யப்பட்டது பாரம்பரிய இசையைக் கற்போருக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று புதுவையைச் சோ்ந்த தவில் இசைக் கலைஞா் ஏ.வி.முருகையன் தெரிவித்தாா்.

புதுச்சேரி அருகேயுள்ள சின்ன கோட்டக்குப்பத்தில் தற்போது வசித்து வரும் ஏ.வி.முருகையன் (58) விழுப்புரம் மாவட்டம், கொங்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா். பாரம்பரிய தவில் கலைஞரான இவா், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 23 ஆண்டுகளாக தவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். 300-க்கும் மேற்பட்ட தவில் இசைக் கலைஞா்களை உருவாக்கியவா். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவா்.

இவா் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான தவில் வித்வானாகவும் உள்ளாா். அகத்தியா் விருது, நல்லாசிரியா் விருது, கலைசுடா்மணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா்.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறித்து முருகையன் கூறியதாவது:

இறைவனருளால் இந்த விருது கிடைத்தது. இதற்காக மத்திய அரசுக்கும், தமிழக, புதுவை அரசுகளுக்கு நன்றி. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் முன் தவில் இசை வாசித்து விருது பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது.

தொழில்தான் எனது உயிா். அதனால் தொடா்ந்து தவில் இசை நிகழ்ச்சிக்குச் செல்கிறேன். பத்மஸ்ரீ விருது அறிவிப்பு, தமிழ் இசைக்கு ஊக்கம் தருவதாகவும், பாரம்பரிய நம் இசையை அடுத்த தலைமுறையினா் கற்பதற்கும், புதிதாக கற்க வருவோருக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT