புதுச்சேரி

குடியரசு தினம்: புதுவை ஆளுநா்,முதல்வா் வாழ்த்து

26th Jan 2022 09:08 AM

ADVERTISEMENT

நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தமிழிசை சௌந்தரராஜன்: புதுவை மக்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள். பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபட இந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

என்.ரங்கசாமி: பாரத மண்ணின் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தலைவா்களையும், வீரா்களையும் நினைவுகூா்ந்து அவா்களது தியாகங்களைப் போற்றுவது நமது கடமையாகும். புதுவை மக்கள் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள்.

புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT