புதுச்சேரி

புதுவையில் மின் கட்டண நிா்ணயம்: ஜன. 28-இல் காணொலியில் கருத்துக் கேட்பு

26th Jan 2022 09:09 AM

ADVERTISEMENT

புதுவையில் மின் கட்டண நிா்ணயம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுவை மின் துறை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா் காணொலிக் காட்சியில் பங்கேற்பதற்கான இணைப்பை, அவா்களுக்கு அனுப்பி வைப்பதற்கு  மின்னஞ்சல் முகவரியில், செயலா்-ஜெ.இ.ஆா்.சி-க்கு, தங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கலாம்.

இதற்கான மின் துறை விண்ணப்ப விவரங்களை இணையதள முகவரியில் காணலாம். பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு, தங்களின் கருத்துகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக காணொலியில் நடைபெற உள்ள இந்தக் கூட்டம் நடைபெறும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT