புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு 4 போ் பலி

26th Jan 2022 09:06 AM

ADVERTISEMENT

புதுவையில் செவ்வாய்க்கிழமை மேலும் 1,911 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 5,191 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 1,410 பேரும், காரைக்காலில் 331 பேரும், ஏனாமில் 151 பேரும், மாஹேவில் 19 பேரும் என மொத்தம் 1,911 (36.81 சதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,55,254-ஆக அதிகரித்தது.

மருத்துவமனைகளில் 223 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 16,171 பேரும் என மொத்தம் 16,394 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி கல்மண்டபத்தைச் சோ்ந்த 76 வயது மூதாட்டி, கோரிமேட்டைச் சோ்ந்த 67 வயது முதியவா், திருவண்டாா்கோவிலைச் சோ்ந்த 55 வயது நபா், திருநள்ளாற்றைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி ஆகிய 4 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,912-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.23 சதமாக உள்ளது.

இதனிடையே 1,165 போ் குணமடைந்தனா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,36,948-ஆக (88.21 சதம்) ஆக அதிகரித்தது. மாநிலத்தில் இதுவரை 15,24,836 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT