புதுச்சேரி

புதுவையில் 20 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

24th Jan 2022 06:08 AM

ADVERTISEMENT

புதுவையில் 20 காவல் கண்காணிப்பாளா்கள் (எஸ்.பி.க்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

அதன்படி, சிஐடி பிரிவில் பணியாற்றிய எஸ்.பி. பக்தவச்சலம் வடக்கு பகுதி எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். கடலோரக் காவல் பிரிவில் பணியாற்றிய பாலச்சந்திரன், ஏனாம் பகுதி எஸ்.பி.யாகவும், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் மேற்கு பகுதி எஸ்.பி.யாகவும், சிறப்புப் பிரிவு எஸ்.பி. மோகன்குமாா் தெற்கு பகுதி போக்குவரத்துப் பிரிவுக்கும் மாற்றப்பட்டனா்.

குற்றப் பதிவேடுகள் பிரிவு எஸ்.பி. பழனிவேல் சிஐடி பிரிவுக்கும், காரைக்கால் வடக்கு பகுதி எஸ்.பி. ரகுநாயகம் சிக்மா செக்யூரிட்டிக்கும், ஏனாம் எஸ்.பி. ராஜசேகா் வல்லட் மாஹே பகுதிக்கும், மாஹே எஸ்.பி. ராஜசேகரன் ஆயுதப்படை கமாண்டன்டாகவும், மேற்கு பகுதி எஸ்.பி. ரங்கநாதன் காவலா் பயிற்சிப் பள்ளிக்கும், காரைக்கால் தெற்கு எஸ்.பி. வீரவல்லபன் போலீஸ் ஆப் போலீஸ் பிரிவுக்கும், சிக்மா செக்யூரிட்டி எஸ்.பி. கவல் நிதின் ரமேஷ் காரைக்கால் வடக்கு பகுதிக்கும், புதுச்சேரி பல்கலைக்கழக ஓஎஸ்டி மாறன் வடக்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி.யாகவும், வடக்கு போக்குவரத்து எஸ்.பி. முருகவேல் ஐஆா்பிஎன் துணை கமாண்டன்டாகவும், போலீஸ் ஆப் போலீஸ் எஸ்.பி. நல்லாம் கிருஷ்ணராய பாபு புதுச்சேரி பல்கலைக்கழக கமாண்டன்டாகவும், பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு எஸ்.பி. ரக்சனா.சிங் உணவுப் பாதுகாப்பு பிரிவுக்கும், காவலா் பயிற்சிப் பள்ளி எஸ்.பி. ரவிக்குமாா் காவலா் தலைமையக எஸ்.பி.யாகவும், பிஏபி கமாண்டன்ட் செல்வம் சிறப்பு பிரிவுக்கும், வடக்கு எஸ்.பி. சுபம் சுந்தா் கோஷ் சைபா் கிரைம் பிரிவுக்கும், தெற்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி. சுப்பிரமணியன் காரைக்கால் தெற்கு பகுதிக்கும், ஐஆா்பிஎன் கமாண்டன்ட் வம்சித ரெட்டி கடலோரக் காவல் பிரிவு எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை தலைமை செயலா் அஸ்வனிகுமாா் பிறப்பித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT