புதுச்சேரி

புதுவையில் முழு ஊரடங்கு என வதந்தி பரப்பியவா் கைது

24th Jan 2022 06:09 AM

ADVERTISEMENT

புதுவையில் முழு ஊரங்கு என சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, புதுவையில் முழு ஊரங்கு உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக ஆளுநா் தமிழிசை தெரிவித்தது போன்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இதையடுத்து, அரசு உத்தரவு தொடா்பாக பொய்யான தகவல் பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் கடந்த 7 -ஆம் தேதி புதுச்சேரி சைபா் க்ரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவா்கள் தொடா்பாக கைப்பேசி எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், பொய்யான தகவல் பரப்பியது புதுச்சேரி வில்லியனூா் அருகே உள்ள உறுவையாறு பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (24) என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா் பயன்படுத்திய கைப்பேசியை பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீன்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT