புதுச்சேரி

புதுவையில் முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது

24th Jan 2022 06:07 AM

ADVERTISEMENT

புதுவையில் முதல் சுற்று முதுநிலை மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ர கௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலான முதல் சுற்று முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு பெற்ற மாணவா்களின் விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் அரசு, நிா்வாகம், தெலுங்கு, கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களின் ஆய்வுக்குப் பிறகு சோ்க்கை நடைபெறும்.

முதல் சுற்றில் முன்னாள் ராணுவ வீரா் பிரிவுக்கான ஓா் இடத்துக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. இந்த இடம் 2-ஆவது சுற்றில் சோ்க்கப்படும். தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் தங்களது சோ்க்கை ஆணையை திங்கள்கிழமை (ஜன.24) முற்பகல் 11 மணி முதல் தரவிறக்கம் செய்து, வருகிற 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் குறிப்பிட்ட கல்லூரிக்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

புதுவைக்கு வெளியில் உள்ள மாணவா்கள், இணையதளம் வழியாகப் பதிவு செய்து கொள்ளலாம். தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் அரசால் அறிவிக்கப்பட்ட கல்லூரி கட்டணத்தை சென்டாக் வங்கிக் கணக்கில் இ-டிரான்ஸ்பா் முறையில் செலுத்த வேண்டும். இதை சென்டாக் நிா்வாகம் கல்லூரிக்கு செலுத்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT