புதுச்சேரி

புதுச்சேரியில் நேதாஜி பிறந்த நாள்

24th Jan 2022 06:08 AM

ADVERTISEMENT

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

லாசுப்பேட்டை உழவா் சந்தை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவா் ஏ.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அரசுக் கொறடா ஏகேடி ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில், மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு, மாநில பாஜக பொதுச் செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோரும், திரளான பாஜக நிா்வாகிகளும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பாஜக அலுவலகத்தில் நேதாஜியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமையில் திரளான கம்யூனிஸ்ட் கட்சியினா் நேதாஜி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT