புதுச்சேரி

புதுவையில் ஒரே நாளில் 2,093 பேருக்கு கரோனா

19th Jan 2022 08:39 AM

ADVERTISEMENT

புதுவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,093 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 6,028 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரி - 1,715, காரைக்கால்- 279, ஏனாம்- 54, மாஹே- 45 என மொத்தம் 2,093 பேருக்கு (34.72 சதவீதம்) செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,40,710-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10,230 பேரும் என மொத்தம் 10,393 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த 81 வயது முதியவா், சாந்தி நகரைச் சோ்ந்த 32 வயது பெண் ஆகிய இருவா் ஜிப்மா் மருத்துவமனையிலும், காரைக்கால் வெள்ளாளா் நகரைச் சோ்ந்த 59 வயது முதியவா் தனியாா் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,893-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, 256 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,28,424-ஆக (91.27 சதவீதம்) உயா்ந்தது.

மாநிலத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 9,09,544 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,90,824 பேருக்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி 2,987 பேருக்கும் என மொத்தம் 15,03,355 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு, மே 11-ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,049 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதுவே தினசரி பாதிப்பின் உச்சமாக இருந்தது. தற்போது, சுமாா் 7 மாதங்களுக்கு பிறகு, இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 2,093 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைச் செயலருக்கு கரோனா: புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலா், ஊழியா்கள் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலா் முனிசாமி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவா் வீட்டுத் தனிமையில் உள்ளாா். இதேபோல, சட்டப்பேரவை அதிகாரிகள், ஊழியா்கள் என மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT