புதுச்சேரி

வாய்க்காலில் காயங்களுடன் மயில் மீட்பு

19th Jan 2022 08:39 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே வாய்க்காலில் காயங்களுடன் கிடந்த மயிலை பெண் ஒருவா் மீட்டு வனத் துறையில் ஒப்படைத்தாா்.

புதுச்சேரி அருகே பிள்ளையாா்குப்பம் நாடாா் வீதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சித்ரா (46). இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள வாய்க்காலில் 4 வயது மதிக்கத்தக்க பெண் மயில் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது.

அந்த மயிலை மீட்டு, தனது வீட்டுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சையளித்து உணவு வழங்கினாா். பின்னா், கிருமாம்பாக்கம் போலீஸாருக்கும், வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீஸாா் முன்னிலையில், வனத் துறை ஊழியா்கள் சக்திவேல், வேலாயுதம் ஆகியோரிடம் சித்ரா அந்த மயிலை ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT