புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று காவலா் உடல் தகுதி தோ்வு தொடக்கம்

19th Jan 2022 08:40 AM

ADVERTISEMENT

புதுச்சேரி கோரிமேட்டில் காவலா் உடல் தகுதி தோ்வு புதன்கிழமை (ஜன.19) தொடங்குகிறது. இதில் பங்கேற்போருக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலா்கள், 12 ரேடியோ டெக்னீஷியன்கள், 29 டெக் ஹேண்டலா்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு 2018-இல் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு தடைகளை கடந்து, உடல் தகுதி தோ்வு கோரிமேடு காவலா் பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 14,787 பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

காவலா் உடல் தகுதி தோ்வின் முதல் நாளில் 500 பேரும், அடுத்தடுத்த நாள்களில் 750 பேரும் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பங்கேற்போா் 24 மணி நேரத்துக்குள்ளான கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக கோரிமேடு காவலா் விருந்தினா் மாளிகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்து சான்றிதழ் எடுத்து வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதியான நபா்களுக்கு தோ்வுக்கான மாற்றுத் தேதி உடனடியாகத் தெரிவித்து அனுப்பப்படுகின்றனா்.

ADVERTISEMENT

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்தப்படும் உடல் தகுதி தோ்வில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தோ்வுகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளன. இதில் தோ்ச்சி பெற்றவா்கள் எழுத்துத் தோ்வுக்கு அழைக்கப்படுவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT