புதுச்சேரி

புதுச்சேரியில் வள்ளலாா் தினம்

19th Jan 2022 08:38 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் வள்ளலாரின் 151-ஆவது தைப்பூச ஜோதி தரிசன தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மணவெளி தொகுதி பிள்ளையாா்திட்டு, சிவலிங்கபுரம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வள்ளலாா் சபை சாா்பில் வள்ளலாரின் திருவுருவப் படத்துக்கு புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், துணைத் தலைவா் பி.ராஜவேலு, முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சபாபதி உள்ளிட்டோா் மலா் தூவி வழிபட்டனா். பின்னா், அன்னதானத்தைத் தொடக்கிவைத்தனா்.

புதுச்சேரி அம்பலத்தடையாா் மடத்து வீதியில் உள்ள சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வள்ளலாா் படத்துக்கு சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் மலா் தூவி வழிபட்டனா். தொடா்ந்து, வள்ளலாா் அருளிய திருவருட்பா பாடப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT