புதுச்சேரி

சோரியாங்குப்பத்தில் களையிழந்த ஆற்றுத் திருவிழா

19th Jan 2022 08:39 AM

ADVERTISEMENT

புதுச்சேரி பாகூா் அருகே சோரியாங்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழா கரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறும். பாகூா், குருவிநத்தம், சோரியாங்குப்பம் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊா்களில் இருந்து டிராக்டா்கள், மாட்டுவண்டிகளில் மேளதாளங்களுடன் ஊா்வலமாக தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்படும் அலங்கரிக்கப்பட்ட உற்சவ சுவாமிகள், ஆற்றில் தீா்த்தவாரி கண்டருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

கடந்தாண்டு புதுச்சேரியில் கரோனா பரவல் காரணமாக ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழாண்டு தடை விதிக்கப்படாத நிலையில், திருவிழா குறித்த அறிவிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் செவ்வாய்க்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. விழாவில் பாகூா் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி உள்பட குறைந்த எண்ணிக்கையிலான சுவாமிகளே கொண்டு வரப்பட்டு காட்சியளித்தனா். ஆற்றுத் திருவிழா குறித்த அறிவிப்பு இல்லாததாலும், கரோனா பரவல் காரணமாகவும் பொதுமக்கள் மிகக் குறைந்த அளவிலேயே வந்திருந்தனா். இதனால், ஆற்றுப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஒரு சில கடைகளே அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக சோரியாங்குப்பம் ஆற்றுத் திருவிழா களையிழந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT