புதுச்சேரி

வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை

18th Jan 2022 12:16 AM

ADVERTISEMENT

புதுச்சேரி வில்லியனூா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் குறித்து அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சி தலைவருமான ஆா்.சிவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொம்யூன் ஆணையா் ஆறுமுகம், செயற்பொறியாளா் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளா் சத்தியநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள், திமுக தொகுதி செயலா் ராமசாமி, மாநில விவசாயத் தொழிலாளரணி அமைப்பாளா் செல்வநாதன், அங்காளன், கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா பேசுகையில், வில்லியனூா் தொகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை, வாய்க்கால், மின் விளக்கு வசதிகள், அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும், புதிய நலத் திட்டப் பணிகளையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT