புதுச்சேரி

புதுவையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா: ஆளுநர், முதல்வர் மரியாதை

17th Jan 2022 12:40 PM

ADVERTISEMENT

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜி ராமச்சந்திரன் 105வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை புதுவையில் கொண்டாடப்பட்டது.

புதுவை அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணகுமார், சட்டப்பேரவை தலைவர் செல்வம், துணைத்தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் புதுவை கிழக்கு மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் ஆ. அன்பழகன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேற்கு மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவினர் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT