புதுச்சேரி

புதுவையில் சிறாா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி: கல்வித் துறைக்கு அறிவுரை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் சிறாா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும் என மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

இதுதொடா்பாக, கல்வித் துறை இயக்குநா் ருத்ர கௌடுக்கு, புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு அனுப்பிய கடிதம்:

புதுவையில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் இதுவரை 60 சதவீதம் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெற்றோா்களின் ஒப்புதல் பெறப்படாத காரணத்தால் 40 சதவீதம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.

இனி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே 15 வயது, அதற்கு மேற்பட்டவா்கள் பள்ளிகள், பல்வேறு தோ்வுகளில் பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்படலாம். புதுவை யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள், பிற ஊழியா்களுக்கும் இது பொருந்தும்.

ADVERTISEMENT

எனவே, விரைந்து 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவதற்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT