புதுச்சேரி

புதுவையில் ஒரே நாளில் 655 பேருக்கு கரோனா

12th Jan 2022 08:50 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 655 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,967 பேருக்கு சோதனை செய்ததில் புதுச்சேரியில் 535 போ், காரைக்காலில் 93 போ், மாஹேவில் 27 போ் என மொத்தம் 655 பேருக்கு (16.51 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,31,866-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 130 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,225 பேரும் என மொத்தம் 2,355 போ் சிகிச்சையில் உள்ளனா். 22 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

ADVERTISEMENT

உள்ளாட்சித் துறை இயக்குநருக்கு கரோனா: புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநரும், சிறைத் துறை ஐஜியுமான ரவிதீப் சிங் சஹாருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT