பிரதமா் பாதுகாப்பு குளறுபடி குறித்த போராட்டம், பஞ்சாப் தோ்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என்று, புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
பஞ்சாபில் பிரதமா் மோடிக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடா்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 போ் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக புதுவை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பஞ்சாப் சம்பவத்துக்கு பிரதமரின் பாதுகாப்பு காவல் குழுதான் பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து, மாநில அரசு மீது குற்றம்சாட்டுவது நியாயமில்லை.
இது பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, பாஜக நடத்தும் நாடகம். அவா்களது திட்டமிட்ட செயலை மக்களிடம் தெரிவிக்கும் வகையில், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றாா் அவா்.