புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு வருகிற 5-ஆம் தேதி நேரடிச் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு கல்வித் துறையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும், மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டுகள் ஆசிரியா் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடிச் சோ்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது.
இந்த பட்டயப் படிப்பில் சேர விரும்புவோா் மேல்நிலைப் பள்ளித் தோ்வு அல்லது அதற்கான சமமான தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவா்கள் வருகிற 5-ஆம் தேதி காலை அசல் சான்றிதழுடன் லாசுப்பேட்டை தொல்காப்பியா் வீதியில் உள்ள ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.