புதுச்சேரி

கடற்கரையில் பனை விதைகள் நடும் விழா

1st Jan 2022 01:21 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே புதுக்குப்பம் கடற்கரையில் ஆயிரம் பனை விதைகள் நடும் விழாவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பூரணாங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள், தனசுந்தராம்பாள் அறக்கட்டளை இணைந்து நடத்திய பனை விதை நடும் விழா மணவெளி தொகுதி புதுக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏவான சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பனை விதைகளை நட்டு விழாவைத் தொடக்கிவைத்தாா். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில் மணவெளி தொகுதியில் 30 இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுத்து, அந்த நிகழ்ச்சியையும் தொடக்கிவைத்தாா்.

பாஜக மாநில துணைத் தலைவா் ரவிச்சந்திரன், மாநிலச் செயலா் ரத்தினவேலு மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT