புதுச்சேரி

புதுவையில் குறையும் கரோனா தொற்று

20th Feb 2022 03:39 AM

ADVERTISEMENT

 

புதுவையில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சனிக்கிழமை 30 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில், கடந்த ஒரு மாதமாக ஆயிரத்துக்கும் மேலாக உயா்ந்து வந்த தினசரி கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தற்போது வேகமாக குறைந்து வருகிறது. புதுவையில் 1,881 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், புதுச்சேரியில்-20, காரைக்காலில்-4, ஏனாமில்-4, மாஹேவில்-2 போ் என மொத்தம் 30 பேருக்கு (1.59 சதவீதம்) சனிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 564 ஆக அதிகரித்தது. இதில், தற்போது 495 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

இதுவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 288 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT