புதுச்சேரியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக இடைத்தரகா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி பூமியான்பேட்டையைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (35). பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டில் லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் அழகு நிலையம் நடத்தி வந்தாா்.
அப்போது, பிள்ளையாா்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நசேடன் மகன் முருகனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.2 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் முருகனுக்கு அரசு வேலை வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.