புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவை பிப்.23-ல் கூடுகிறது

17th Feb 2022 12:47 PM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் கடந்தாண்டு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது.

இதனையடுத்து இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிகிறது.

இதற்காக, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், செயலாளர் முனுசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. பிப். 23 அல்லது பிப். 28ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல்வர் ரங்கசாமி மற்றும் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு, தேதி முடிவு செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றனர்.

இதனால் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT