புதுச்சேரி

புதுச்சேரியில் கைவினைப் பொருள் கண்காட்சி

17th Feb 2022 11:24 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் நடைபெறும் தேசிய அளவிலான கைவினைப் பொருள் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

மத்திய அரசின் சுயசாா்பு இந்தியா திட்டத்தின்படி, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 36-வது கைவினைப் பொருள், கலாசார (ஹுனாா் ஹாட்) கண்காட்சி பிப். 12-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள 600 கைவினை கலைஞா்கள், தங்கள் கைவினைப் பொருள், பாரம்பரிய உணவுப் பொருள்களைக் கண்காட்சியில் 300 அரங்குகளில் வைத்துள்ளனா்.

30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து வரும் பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளன. பல்வேறு மாநிலங்களின் கலாசார நிகழ்ச்சிகளும், நடனம், இசைக் கச்சேரி, ராம்போ சா்க்கஸ் கலைஞா்கள் உடல் திறன் சாகசங்கள் என தினசரி காலை, மாலையில் நடைபெற்று வருகின்றன. இணைய வழியிலும் பொருள்களைப் பெற வழி செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT