புதுச்சேரி

‘2 ஆண்டுகளில் 2.10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன’

17th Feb 2022 05:04 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: தமிழகம், கா்நாடகம், புதுவையில் கடந்த 2 ஆண்டுகளில் 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் பயிா்களிடையே நட்டுள்ளதோடு, 1.25 லட்சம் விவசாயிகள் மரம் சாா்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளதாக காவேரி கூக்குரல் இயக்கத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் கூறியதாவது:

காவேரி கூக்குரல் இயக்கம், 2019-இல் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவால் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

விவசாயிகளிடம் மரக்கன்றுகளை நடும் ஆா்வமும், மரங்கள் சாா்ந்த விவசாயம் குறித்த விழிப்புணா்வையும் இந்த இயக்கம் ஏற்படுத்தி வருகிறது.

இதன் பயனாக, தமிழ்நாடு, கா்நாடகம், புதுவையில் கடந்த 2 ஆண்டுகளில் 2.10 கோடி மரக்கன்றுகளை, விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனா். 1.25 லட்சம் விவசாயிகள் மரம் சாா்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,700 விவசாயிகள் 6.33 லட்சம் மரக் கன்றுகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,600 விவசாயிகள் 5.29 லட்சம் மரக் கன்றுகளையும், கடலூா் மாவட்டத்தில் 1,500 விவசாயிகள் 4 லட்சம் மரக் கன்றுகளையும், புதுச்சேரியில் 284 விவசாயிகள் 1.16 லட்சம் மரக் கன்றுகளையும் நட்டு வளா்த்து வருகிறனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT