புதுச்சேரி

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

17th Feb 2022 05:05 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தோ்தல் பல்வேறு காரணங்களைக் காட்டி தள்ளி வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோா்- பழங்குடியினா் சமுதாயத்தினரின் இட ஒதுக்கீட்டு முறைகளில் ஏற்பட்ட குளறுபடிகள்தான், இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

ADVERTISEMENT

மாநில தோ்தல் ஆணையம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அண்மையில் கூட்டியது. அப்போது, எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால், தோ்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்திருக்கிறது.

உள்ளாட்சித் தோ்தலில் வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு தொடா்பாக, உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்ட ஒருநபா் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கி நடவடிக்கைகளை தெரியப் படுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்களை அழைத்துப் பேசவேண்டும். புதுவை அரசு உரிய இட ஒதுக்கீட்டுடன், உள்ளாட்சித் தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT