புதுச்சேரி

திருக்காஞ்சி கோயிலில் மாசிமக தேரோட்டம்

17th Feb 2022 05:03 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மாசிமக தேரோட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியிலுள்ள காமாட்சி-மீனாட்சி அம்மன் சமேத கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 8-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 9-ஆவது நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

உற்சவா் கங்கைவராக நதீஸ்வரருக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காமாட்சி-மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரா் உற்சவா் தேரில் எழுந்தருளினாா்.

ADVERTISEMENT

மாநில வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன் மற்றும் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று தோ் நிலையம் அடைந்தது.

சங்கராபரணி ஆற்றங்கரையில் வியாழக்கிழமை (பிப்.17) காலை 8 மணிக்கு தீா்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT