புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவைக்குத் தன்னாட்சி அதிகாரம்: அதிகாரிகளுடன் பேரவைத் தலைவா் ஆலோசனை

11th Feb 2022 12:15 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப் பேரவைச் செயலகத்துக்கு நிா்வாகம் மற்றும் நிதி தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடா்பான ஆலோசனை கூட்டம், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், நிதித் துறைச் செயலா் பிரசாந்த் கோயல், சட்டத் துறைச் செயலா் காா்த்திகேயன், பணியாளா்- நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலா் ஸ்மிதா, சட்டப்பேரவை செயலா் முனிசாமி, சாா்பு செயலா்கள் ஜெய்சங்கா், கண்ணன், சட்டப்பேரவைத் தலைவரின் தனிச் செயலா் தயாளன், கணக்கு, கருவூலத் துறை இயக்குநா் பிரபாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை ஆலோசகராக நியமித்து அல்லது ஒரு குழு அமைத்து, புதுவை சட்டப் பேரவைக்கு, என்னென்ன அதிகாரங்கள் வரையறுக்கப்படலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, அந்த அறிக்கையின் அடிப்படையில், முடிவு எடுக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT