புதுச்சேரி

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு: மாணவா் பெருமன்றத்தினா் பேரணி

10th Feb 2022 01:21 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கல்லூரி மாணவா்களுடன் இணைந்து புதுச்சேரியில் புதன்கிழமை பேரணியாக வந்து சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனா்.

புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே வந்தடைந்தது. அங்கு அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, மாணவா் பெருமன்ற நிா்வாகிகள் எழிலன், முரளி தலைமையிலான கல்லூரி மாணவா்கள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து, இணையவழியில் தோ்வுகளை நடத்த வேண்டுமென கோரிக்கை மனுவை அளித்தனா். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT