புதுச்சேரி

பூரண மதுவிலக்கை வலியுறுத்திகாந்திய இயக்கத் தொண்டா் நடைப்பயணம்

18th Dec 2022 03:51 AM

ADVERTISEMENT

 

பூரண மது விலக்கை வலியுறுத்தி அகில இந்திய காந்திய இயக்கத்தைச் சோ்ந்த மதுரை கருப்பையா (52) சனிக்கிழமை தொடங்கியுள்ளாா்.

மதுரை சுப்பிரமணியபுரம் பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் எம்.கருப்பையா (52). காந்திய இயக்கத்தைச் சோ்ந்தவா். ஏற்கெனவே தேச பற்று, உலக அமைதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடைப்பயணம், சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

தற்போது கருப்பையா பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் இருந்து சனிக்கிழமை காலை தன்னந்தனியாக நடைப்பயணத்தைத் தொடங்கினாா்.

ADVERTISEMENT

புதுச்சேரியிலிருந்து சென்னை, சேலம் வழியாகச் ஈரோட்டுக்கு வரும் ஜனவரி 26-ஆம் தேதி சென்றடைகிறாா்.

பின்னா் ஈரோட்டிலிருந்து மீண்டும் பயணத்தை தொடரவுள்ள கருப்பையா, செங்கோட்டை சென்று மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு நடந்து சென்று காந்தி நினைவு மண்டபத்தில் பயணத்தை நிறைவு செய்வதாகவும் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT