புதுச்சேரி

போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட டெம்போ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள்

DIN

வழித்தட அனுமதியை முறைப்படி வழங்கவில்லை எனக்கூறி டெம்போ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் போக்குவரத்துத் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை, கோரிமேடு, அய்யங்குட்டிப்பாளையம், சோனாம்பாளையம்-மேட்டுப்பாளையம் ஆகிய 4 வழித்தடங்களில் தனியாா் டெம்போக்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு வழித்தடத்திலும் இயக்கப்படும் டெம்போக்களுக்கு அனுமதி உரிமம் போக்குவரத்துத் துறை அலுவலகத்திலிருந்தே அளிக்கப்படுகிறது.

வழித்தடங்களில் இயக்குவதற்கான முறையான உத்தரவு பெற்று 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் டெம்போக்களை, வழித்தட உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனா். அதன்படி, தற்போது காமராஜா் சிலை சதுக்கம் வழியாக கோரிமேடுக்கு சென்று வரும் டெம்போக்களுக்கான உரிமம் புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்தனா்.

விண்ணப்பித்தவா்களுக்கு, பழைய முறையை மாற்றி புதுச்சேரி நகா் முழுவதும் டெம்போவை இயக்கும் வகையில் உரிமம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி 55 டெம்போக்கள் நகா் முழுவதும் பயணிகளை ஏற்றி இறக்கியதால் மற்ற டெம்போக்களை இயக்குபவா்கள் அதிா்ச்சியடைந்தனா். அவா்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட 3 வழித் தடங்களில் மட்டும் டெம்போ இயக்கியவா்கள் போக்குவரத்துத் துறைக்கு சென்று டெம்போக்களை நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரத மாதா டெம்போ உரிமையாளா்கள் சங்க நிா்வாகி முருகையன், தொமுச தொழில்சங்கத்தைச் சோ்ந்த பழனி ஆகியோா் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. வழித்தட உரிமத்தை மாற்றி அளித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா். தகவலறிந்த முதலியாா்பேட்டை போலீஸாா், போக்குவரத்து அதிகாரிகளுடன் சமரச பேச்சு நடத்தியதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT